சட்டப்பேரவை தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வாக்குப்பதிவு..!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். மாவட்ட வாரியாக ஆண், பெண்களின் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
அதில் 2 கோடியே 26 லட்சத்து 36 ஆயிரத்து 256 ஆண் வாக்காளர்களும் 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பெண் வாக்காளர்களும் வாக்களித்ததாக குறிப்பிட்டுள்ளது. ஆண் வாக்காளர்களில் 80 லட்சத்து 32 ஆயிரத்து 495 பேரும் பெண் வாக்காளர்கள் 87 லட்சத்து 76 ஆயிரத்து 376 பேரும் வாக்களிக்கவில்லை.
மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 192 வாக்காளர்களில் ஆயிரத்து 419 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.






