ஜெயலலிதா அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்காக இன்று திறப்பு..!
பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த ஜெயலலிதா அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது.
80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அருங்காட்சியகம் அறிவுசார் பூங்கா அமைத்துள்ளனர் பின்னர் பராமரிப்பு பணிக்காக பிப்ரவரி 2ஆம் தேதி மூடப்பட்டது நினைவிடத்தில் இருக்கும் அருங்காட்சியகம் அறிவுசார் பூங்கா போன்றவை மக்கள் பார்வைக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர். ஜெயலலிதா முழு உருவச்சிலை, புகைப்படம், தேசிய தலைவர்களை சந்தித்த படங்கள், வாழ்க்கை குறிப்புகள் என பல தகவல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.






