--- --:--:-- --

கரூரில் வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கிய 5 கோடி..!

3

ரூரில் டெக்ஸியார்டு யூனிட்டி எக்ஸ்போர்ட், கிலோபல் நிறுவனம் மற்றும் பிரகாஷ், மாரியப்பன் எனும் இரண்டு பைனான்சியர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

 

சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து நேற்று மதியம் சோதனையை தொடங்கினர். இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.

 

இதில் குளோபல் நிதி நிறுவனத்தில் கணக்கில் வராத 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் திருப்பூரில் மக்கள் நீதி மையத்தின் மாநில பொருளாளரும், தொழிலதிபருமான சந்திரசேகர் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

 

அவரோடு பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில் வர்த்தகம் தொடர்புடையவர்கள் என்பதன் அடிப்படையில் கரூரில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon