ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வு..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்படும் நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 4,230 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 69 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 69 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.






