இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா..!
நடப்பு வருடத்தில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28 ஆயிரத்து தொள்ளாயிரத்து மூன்று பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று ஒரே நாளில் கொரொனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து 188 ஆக அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கூட முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





