--- --:--:-- --

குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மருந்துக்கான 6 கோடி ரூபாய் வரி தள்ளுபடி..!

5

5 மாத பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மருந்துக்கான 6 கோடி ரூபாய் வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த தம்பதியினரின் 5 மாத குழந்தை அரியவகை மரபியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.

 

இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கான மருந்து அமெரிக்காவில் கிடைக்கும் என்றும் அதன் விலை 16 கோடி ரூபாய் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட வழிகளில் மருந்துக்கான பணத்தை திரட்டி நிலையில் அந்த மருந்திற்கு 6 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டியிருந்ததால் வேதனை அடைந்தனர். மருந்துக்கு வரி தள்ளுபடி கேட்டு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதினர்.

 

இதையடுத்துத்து மருந்துக்கான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளை தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளதால் குழந்தையின் பெற்றோர்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon