--- --:--:-- --

மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ள 23 வயது மானசா..!

4

ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் மானசா வாரணாசி மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற இறுதிச்சுற்று அழகிப்போட்டியில் மானசா மிஸ் இந்தியா பட்டத்தை கைப்பற்றி மகுடம் சூட்டியுள்ளார்.

 

பொறியியல் பட்டதாரியான மானசா கல்லூரி காலம் முதலே மாடலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் மானசா பங்கேற்க உள்ளார். ஹரியானாவை சேர்ந்த மணிகாஷ் கிராண்ட் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுனரின் மகள் மணியாசி ரன்னர் அப் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon