இனி குழந்தைகளை தங்க தொட்டியில் வைத்து தாலாட்டலாம்..!
குழந்தைகளை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்ட எந்த பெற்றோருக்கு தான் ஆசை இருக்காது. பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் பிரார்த்தனை திட்டம் நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்க தொட்டில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் ஒரு கோடி மதிப்பில் தங்கத் தொட்டில் தயாரிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க தொட்டிலில் குழந்தைகளை வைத்து தாலாட்டி தங்கள் பிரார்த்தனையை செலுத்திக் கொள்ளலாம்.
பூஜைக்குப் பிறகு குழந்தையை தங்க தொட்டிலில் படுக்க வைத்து புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பிரார்த்தனைக்காக கட்டணம் ரூபாய் 300 செலுத்த வேண்டும்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கொரொனா காரணமாக சுமார் ஒரு ஆண்டு காலமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் வேண்டுகோளை அடுத்து நேற்று முதல் தங்கத்தொட்டில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தங்க தொட்டிலில் தாலாட்டி பிரார்த்தனையை நிறைவேற்றி பிரசாதங்களை பெற்று சென்றனர்.






