கண் முன்னே விபத்தில் பலியான மனைவி..! மடியில் சடலத்தை போட்டு கதறி அழுத கணவர்..!
தேனியில் இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மனைவி பலி ஆகி விட சடலத்துடன் கணவன் நடத்திய பாசப்போராட்டம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள பிசி பட்டியை சேர்ந்த ஜெயராமன் தன் மனைவி ராஜலட்சுமி உடன் பெரியகுளம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டில் நடக்க உள்ள நிகழ்வு ஒன்றுக்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க இருவரும் சென்றுள்ளனர்.
கைலாசபட்டி அருகே இருசக்கர வாகனம் சென்றபோது கம்பத்தில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி கீழே விழுந்துள்ளனர்.
இதில் ராஜலட்சுமி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிக் கொண்டுள்ள ராஜலட்சுமி மீது பேருந்து ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கண் முன்னரே மனைவி ரத்த வெள்ளத்தில் பலியாகிக் கிடப்பதை கண்ட ஜெயராமன் துடிதுடித்துப் போனார்.
மனைவியின் உடலில் தன் மடியில் கிடத்திக் கொண்டு தயவு செய்து எழுந்திரிமா என்று அவர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.ராஜலட்சுமியின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
இதற்கிடையே அரசு பேருந்தின் ஓட்டுநர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.தென்கரை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





