--- --:--:-- --

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுசின் முதற்கட்ட படப்பிடிப்பு 8ம் தேதியுடன் நிறைவடைகிறது..!

14

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

 

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய படப்பிடிப்பு 8ம் தேதியுடன் முடிவடைகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஒரு மாதம் நடைபெற்ற அந்த படப்பிடிப்பில் சுமார் 70 சதவீத காட்சிகளை படமாக்கி விட்டதாக தெரிகிறது. மேலும் இறுதி கட்ட படப்பிடிப்பை இரண்டு மாதங்கள் கழித்து தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon