மோடியின் சகோதரர் மகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு.!
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கவில்லை. குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளுக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுகா பஞ்சாயத்துகளுக்கு 28ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் 576 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அதில் அகமதாபாத் மாநகராட்சியில் படக்பே வார்டில் போட்டியிட பிரதமர் மோடியின் அண்ணன் மகள் சோனால் மோடி சீட் கேட்டு இருந்தார்.
ஆனால் அவருக்கு வழங்கப்படவில்லை. குஜராத் நியாயவிலை கடைகள் சங்க தலைவராக உள்ள சோனால் மோடி தனக்கு சீட் வழங்கப்படவில்லை என்றாலும் பாரதிய ஜனதாவிற்காக துடிப்புடன் செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் பாஜக தலைவர்களின் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்க கூடாது என்று கட்சி தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார்.






