வயர் இல்லாமல் இனி மொபைல்களுக்கு சார்ஜ் போடலாமா..?
வயர் இல்லாமல் ஒரே நேரத்தில் பல மொபைல்களை தானியங்கியாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை ஜியோமி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. எம்ஐ ஏர் சார்ஜ் என்று இந்த புதிய டிவைஸ்க்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த டிவைஸ் இல் இருக்கும் 5 பேஸ் ஆண்டநாக்கள் 2 மீட்டர் சுற்றளவில் இருக்கும் மொபைல் போன்களை கண்டறிந்து அலைக்கற்றைகள் மூலம் சார்ஜ் ஏற்றும். ஒவ்வொரு மொபைல் போன்களுக்கும் 5 வாட்ஸ் அளவுக்கு மின்சாரம் வழங்கும் திறன் உடையதாகும்.






