ஒருபோதும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் செல்ல முடியாது..!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிப் ராக்கெட் சோதனைக்கு அனுமதி கிடைக்காததை அடுத்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் ஒருபோதும் செல்ல முடியாது என தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. டெக்ஸாஸில் அந்த நிறுவனம் ஸ்டார் சிப் ராக்கெட் சோதனை நடத்த தயாரானது.
ஆனால் பாதுகாப்பு சிக்கல்களை காரணம் காட்டி கடைசி நேரத்தில் அதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதுபோல் நெருக்கடி கொடுத்தால் மனிதகுலம் ஒருபோதும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





