பிக் பாஸ் நடிகை ஜெய ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை..!
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெயஸ்ரீ ராமையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற ஜெயஸ்ரீ ராமையா கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்தார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டு அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக பெங்களூருவில் உள்ள ஆசிரமம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆசிரமத்தில் உள்ள அறை ஒன்றில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






