வீரமரணமடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உள்ளிட்ட 4 பேருக்கு வீர் சக்ரா விருது..!
கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவத்துடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உள்ளிட்ட 4 பேருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற ஜூன் 15-ஆம் தேதி இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் அத்துமீறி முகாம்களை அமைத்து இருந்தனர். இந்திய வீரர்கள் குழுவாக சென்று சீன வீரர்களை தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் இரும்புத் தடிகள் போன்றவற்றால் இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். சந்தோஷ் பாபு தலைமையில் அவர் பழனி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தால் அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. அந்த மோதலில் கனல் சந்தோஷ் பாபு, பழனி உள்ளிட்டோர் இந்திய வீரர்கள் இறந்தனர்.
இந்த நிலையில் சந்தோஷ் பாபுவின் வீரத்தைப் பாராட்டி ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான மகாவீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் வீரமரணமடைந்த பழனிக்கு வீர் சக்ரா விருதை அரசு அறிவித்துள்ளது.
40 வயதான பழனி இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 22 ஆண்டுகளாக இந்தியாவுக்காக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






