நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து..!
குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கொரொனா அச்சுறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையை தவிர அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூற வளர்ச்சித்துறை சுற்றி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.






