--- --:--:-- --

கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை..!

11

சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

 

விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு வீட்டின் உரிமையாளரின் மகன் விக்னேஷ் அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியின் வாயைப் பொத்தி தனது வீட்டிற்கு தூக்கிச்சென்று விக்னேஷ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

 

தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமி பெற்றோருடன் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon