இம்ரான்கான் போலவே தோற்றமுடைய இளைஞர் ஒருவர் வீடியோ வைரல்..!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போலவே தோற்றமுடைய இளைஞர் ஒருவர் ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் ரிக்ஷாவில் பயணித்த இளைஞர் ஒருவர் பார்ப்பதற்கு அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் போலவே இருந்தது மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த காட்சி ஒன்று இணையதள பக்கங்களில் வெளியாகியுள்ள நிலையில் பார்ப்பதற்கு இம்ரான்கான் போலவே உள்ள இளைஞரின் வீடியோவை நெட்டிசன்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.






