தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார்..!
சசிகலா வெளியே வருவதால் ஏற்படும் ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் பழனிசாமி டெல்லிக்கு சென்று இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் அந்த கட்சி தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்ற மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்.
அப்போது பேசிய அவர் இங்கு கூடியிருக்கும் பெண்களை பார்க்கும்போது வரும் தேர்தலில் பெரும் வெற்றி உறுதி என்று காட்டுகிறது என்றார்.






