பிரியா விடை பெற்றுக் கொள்வதாக டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட மெலனியா டிரம்ப்..!
வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் இருந்து பிரியா விடை பெற்றுக் கொள்வதாக டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரொனாவை எதிர்த்துப் போராடி வரும் செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாடே கொரொனாவால் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். செய்யும் செயல்களை ஆர்வத்துடன் வன்முறையின்றி செய்ய வேண்டும் எனவும் பெற்றோர்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க மாறும் மெலனியா டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.






