--- --:--:-- --

ஆதிசிவன் அய்யனார் ஆலயம் உடைக்கப்பட்டுதற்கு வைகோ கண்டனம்..!

1

ராணுவ உதவியோடு இலங்கையில் ஆதிசிவன் அய்யனார் ஆலயம் உடைக்கப்பட்டுதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அவரது அறிக்கையில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளன என்றும், குருந்தா சேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாக கூறி ஆலயம் உடைக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

 

குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வழிபாடு செய்துவந்த பகுதியில் புத்தர் சிலை ஒன்றைக் கொண்டு வந்து வழிபாடு செய்யப்படுவதால் தமிழர்கள் கடும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இன்னும் சில மாதங்களில் பௌத்தர்கள் அங்கு வாழ்ந்ததாக கூறி பௌத்த விகாரையை கட்டி விடுவார்கள் என தமிழ் மக்கள் குற்றம் சாட்டுவதாக தெரிவித்துள்ளார். கேள்வி கேட்பார் இல்லை என்ற ஆணவத்தில் சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon