வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 55வது நாளாக தொடர்கிறது..!
விவசாயிகள் மத்திய அரசு இடையே இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகளின் இன்று தொடர் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றன. ஆனால் வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகள் மத்திய அரசு இடையே இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






