தம்பி மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்தவர் போலீசில் சரண்..!
திருவாரூரில் பணம், கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் தம்பி மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்தவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்த சுந்தரமூர்த்தி, ஸ்வர்ண பிரியா தம்பதியினர் ஊரடங்கு காரணமாக திருவாரூருக்கு வந்து வீட்டில் இருந்து வேலை செய்து வந்துள்ளனர்.
அண்ணன் ராஜகோபாலனுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த சுந்தரமூர்த்தி பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு அண்ணனுக்கு 15 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்திற்கு பதிலாக பள்ளி நிர்வாகத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என தம்பி மனைவி கேட்கவே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கூட்டு குடும்பத்தில் பிரச்சினை வர தம்பி மனைவி தான் காரணம் என கருதிய ராஜகோபால் ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் குத்திக் கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது.






