5 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!
புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 19 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர்குடிப் பட்டியை சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அன்பரசன்.
கடந்த 2011ஆம் ஆண்டு அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த சிறுமி ஒருவரை பள்ளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பாலியல் வன்கொடுமைக்கு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய ஞானசேகரன் என்பவன் உடந்தையாக இருந்துள்ளார்.
இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில் மாவட்ட மகிளா நீதிமன்றம் அன்பரசன் 49 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தலைமையாசிரியர் ஞானசேகரனுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.






