--- --:--:-- --

அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள கூடாது..!

7

லர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் கோவாக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து கடந்த 16ஆம் தேதி முதல் கோவிஷீல்டு தடுப்பூசியின் களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் மருந்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையின் உள்ளது.

 

இந்நிலையில் முழு உடல் நலத்துடன் இருப்பவர்கள் மட்டுமே கோவாக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

 

வேறு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் கோவாக்ஸின் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ள வேண்டாம் எனக் கூறும் பாரத் பயோடெக் நிறுவனம் எச்ஐவி போன்ற கடும் தொற்றுக்கு ஆளானவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் கீமோதெரபி சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஊசி போட்டுக் கொள்பவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என்றும்   நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon