கோவிலை இடித்து சேதப்படுத்தியதாக நடிகர் விமல் மீது புகார்..!
கோவிலை இடித்து சேதப்படுத்தியதாக நடிகர் விமல் மீது திருச்சி மாவட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மந்தை எனுமிடத்தில் நடிகர் விமல் வீட்டில் முன்பு இருந்த காலி இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருப்புசாமி கோவில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விமலும் அவரது உறவினர்களும் ஜேசிபி எந்திரம் மூலம் கோவிலை இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த 13ம் தேதியும் கோவிலில் இருந்த வேல் உள்ளிட்ட பொருட்களை நடிகர் விமல் தரப்பினர் எடுத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






