சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் ஒன்பதாம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா பூந்தமல்லியை அடுத்து உள்ள ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவரை கைது செய்தனர்.
டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோட்டாட்சிய ர்வரதட்சணை கொடுமை காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா என்று கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒரு கோடி ரூபாய் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவில் வழக்கு ஒன்று ஹேம்நாத் மேல் உள்ளது.
அந்த வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது சின்னத்திரை நடிகைசித்ராவின் தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.