நடிகர்கள் அஜீத், தனுஷ், ஜோதிகா உள்ளிட்டோருக்கு தாதா சாகிப் பால்கே விருது..!

தென்னிந்திய திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருது நடிகர்கள் அஜித் குமார், தனுஷ், நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது சிறந்த படமாக செழியன் இயக்கிய டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பன்முகத் தன்மை வாய்ந்த நடிப்பதற்காக அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

 

சிறந்த இயக்குனருக்கான விருதை ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபன், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது.


Leave a Reply