--- --:--:-- --

டெல்லியில் வரலாறு காணாத பனிப்பொழிவு..!

8

டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகரில் கரும்பு கழிவுகளை எரிப்பதால் பரவிய புகை மூட்டம் காரணமாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

 

அதன் பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சராசரி வெப்பநிலை 1.1 செல்சியஸ் என்ற அளவில் குறைந்துவிட்டது. சில இடங்களில் 0 டிகிரி குறைவாக வெப்பம் இருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே உள்ளனர். சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வழியே செல்ல நேர்ந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon