--- --:--:-- --

காதலியின் தந்தை திருட்டு பட்டம் கட்டியதால் ஆசிட் குடித்த இளைஞர்..!

9

சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போலீசில் திருட்டு புகார் கொடுத்ததால் இளைஞர் ஒருவர் மன உளைச்சலில் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். சென்னை எருக்கஞ்சேரி பகுதியை ஜெயப்பிரியன். இவர் தனது பள்ளித் தோழியை காதலித்து வந்துள்ளார்.

 

இந்த காதலுக்கு பெண்ணின் தந்தையான ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணும் காதலில் உறுதியாக இருந்ததால் அவனை வீட்டிற்கு அழைத்து தனது மகள் மீதான காதலை கைவிடுமாறு பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார்.

 

தந்தையான ஓய்வு பெற்ற காவல் அதிகாரி செம்பியம் காப்பியத்தில் அவர் மீது நகையை திருடியதாக புகார் கொடுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த சூழலில் காதலை கைவிடக்கோரி காதலியின் தந்தை போலீசில் பொய் புகார் அளித்ததாக இளைஞரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 10 சவரன் நகையை தனியார் நிதி நிறுவனத்தில் அதற்கான ரசீது கிடைக்கப்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

அந்த நகைகள் திருடப்பட்டதா அல்லது காதலிக்கும் பெண் கொடுத்ததா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon