கோவை : ஆலாந்துறை அம்மா கிளினிக் திறப்பு விழாவில் தனது பிறந்த நாள் விழாவினை கொண்டாடிய செவிலியர்.வாழ்த்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

மிழகத்தில் தற்போது கொரோனோ வைரசின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் துவங்கி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லா இடங்களில் கர்ப்பிணிகள்,முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 70 அம்மா மினி கிளினிக் துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதனடிப்படையில் கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர் செட்டிபாளையம்,தொண்டாமுத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட ஆலாந்துறை,இக்கரை போளுவாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து 10 கர்ப்பிணிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டில் தாய்,சேய் நலப்பெட்டகம் வழங்கப்பட்டது.

 

மேலும்,இந்த அம்மா மினி கிளினிக்கானது காலை 8 மணி முதல் 12 மணி வரையும்,மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படும்.இதில் ஒரு மருத்துவர்,ஒரு செவிலியர்,ஒரு உதவியாளர் என மூவர் பணியில் இருப்பர் எனவும்,இங்கு சர்க்கரை,உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையளிக்கப்படும் எனவும்,நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்து,மாத்திரைகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட செவிலியர் ஒருவர் தன் பிறந்த நாளை ஒட்டி அமைச்சருக்கு கேக் வழங்கினார்.அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் செவிலியருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.இதனால் அச்செவிலியர் மன மகிழ்ச்சியடைந்தார்.

 

அதனை தொடர்ந்து தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன்,பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங்,துணை இயக்குநர் மருத்துவ பணிகள் ரமேஷ் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.


Leave a Reply