3,134 பாடபுத்தகங்களை இரும்பு கடையில் விற்பனை செய்த பள்ளிக்கல்வித் துறை ஊழியர்..!

யிலாடுதுறையில் 3 ஆயிரத்து 134 பாடபுத்தகங்களை இரும்பு கடையில் விற்பனை செய்த பள்ளிக்கல்வித் துறை ஊழியர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மயிலாடுதுறை முத்துவக்கில் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் மூட்டை மூட்டையாக புதிய பள்ளி பாடப்புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடப்புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.

 

அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி பழைய இரும்பு கடை உரிமையாளர் மற்றும் பணியாளரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் புத்தகக் கடையின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மேகநாதன் முறைகேடாக புத்தகங்களை எடைக்குப் போட்டது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து மேகநாதனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது அரசு பொருளை நம்பிக்கை துரோகம் செய்து விற்பனை செய்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரும்பு கடை உரிமையாளர் பெருமாள் சாமியும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Leave a Reply