விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது..!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 34வது நாளாக நீடிக்கும் சூழலில் நாளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆறாவது முறையாக விவசாயிகளுடன் மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நரேந்திர சிங் தோமர் 2 மணி அளவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.

 

இந்த பேச்சுவார்த்தையில் என்ன அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

குறிப்பாக விவசாயிகளைப் பொருத்தமட்டில் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஆனால் மத்திய அரசு வாய் மொழி வழியாக தெரிவிக்கும் கருத்துக்கள் வேளாண் சட்டங்களில் மேம்படுத்தும் திருத்தம் உள்ளிட்டவைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

 

இதன் காரணமாக நாளைய தினம் இந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Leave a Reply