கர்நாடகாவில் இரவு ஊரடங்கு திடீரென வாபஸ்..!
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு திடீரென வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் ஊரடங்கு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவகை கொரொனா தொற்று வைரஸ் பரவலால் மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் திடீரென இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வணிக நிறுவனங்கள் கடைகள் இயங்க கூடாது என்றும் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது ரத்து செய்யப்படுகிறது.
மருத்துவ நிபுணர் குழு சுகாதாரத்துறை நடத்திய ஆலோசனை இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






