--- --:--:-- --

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஆபாச வீடியோ பொதுமக்கள் அதிருப்தி !!!

7.4

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் வேலை நேரத்தில் அலுவலகத்தில் பெண்கள் பணிபுரியும் இடத்தில் ஆபாச வீடியோ பார்த்தது,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அலுவலக‌ வேலை நேரத்தில், அனைத்து அலுவலர்கள் மற்றும் பெண்பணியாளர்கள் இருக்கும் நேரத்தில் தனது இருக்கையில் அமர்ந்தபடி,தனது மக்களுக்கு பயன்படுவதற்காக தொலைத்தொடர்பு வைக்கப்பட்டுள்ளது.

அதன்வாயிலாக இணையதள உதவியுடன் வீடியோக்கள் மற்றும் ஆபாசபடங்கள் பார்த்துவருகிறர்.தன் பணியை சரிவர செய்யாமல் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் அரசு அலுவலகத்தில் ஈடுபட்டு வருகிறார். சிவகங்கை மாவட்ட அரசு அலுவலகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்கள் தனது வேலைக்காக பர்மிஷன் என்ற பெயரில் அனுமதி பெற்று வெளியில் சென்று விடுகின்றனர்.

 

இந்நிலையில் பொதுமக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட அரசு அலுவலகங்களில் வெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

மக்கள் பலர் வந்து செல்லும் தேர்தல் பிரிவில் அமர்ந்து இது போன்ற தவறான செயல்களை செய்யும் நபரை கண்டு அங்கு வந்த பொதுமக்கள் பலர் முகம் சுழித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு துணிவாக இப்படி ஓர் செயலை செய்ததன்மூலம் அங்கு பணியாளர்கள் வேலை செய்வதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கு வெளிப்படையாக தெரிகிறது.

 

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நன்னடத்தை வகுப்புகள் மற்றும் மேற்பார்வைகளை துரிதப்படுத்த வேண்டும் இது மிக அவசியம் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon