--- --:--:-- --

இராமநாதபுரத்தில் தேவேந்திர குல வேளாளர் கிழக்கு குடியிருப்பு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு..!

7.1

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் கடலாடி ஒன்றியம் இதம்பாடல் ஊராட்சி தேவேந்திர குல வேளாளர் கிழக்கு குடியிருப்பு மக்கள் ஊராட்சி மன்ற தலைவரால் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

மேலும் பொதுமக்கள் கூறியதாவது :- எங்கள் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் கிழக்கு குடியிருப்பு பகுதியில் ஏறக்குறைய ஓரிரு மாதங்களாகியும் மழைத் தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் தெரு முழுவதும் தேங்கி சாக்கடை போல் காட்சியளிக்கிறது.

ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களிடம் பல முறை இது சம்மந்தமாக வலியுறுத்தியும் செவி சாய்க்காமல் பாராமுகம் காட்டி வருகிறார். சம்மந்தப்பட்ட தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துறைத்தும் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது ஊராட்சி நிர்வாகம்.

ஆகவே சிறுவர்கள் பெண்கள் மற்றும் வயதானவர்களின் நலன் கருதியும் தொடர் மழை காலம் மற்றும் கோரோனா நெருக்கடியான நேரத்தையும் மனதிற்கொண்டு தாங்கள் செய்தி வெளியிட்டு மேற்படி பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வழி வகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon