குப்பை குழிகளில் மழை நீரால் நிரம்பியதால் வீட்டுக்குள் வரும் சாக்கடைகள்..!
மானாமதுரை அருகிலுள்ள கால் பிரிவு கிராமத்தில் குப்பை குழிகளில் மழைநீர் நிரம்பி வீதிகளிலும் வீட்டுக்குள்ளேயும் வருகிறது. கால்பிரிவு கிராமத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு சுமார் 6 அடி ஆழமும் உள்ள 20அடி அகலமும் குழிகள் வெட்டப்பட்டு உள்ளன.
குப்பைகளை கொட்டுவதற்காக குழிகள் வெட்டப்பட்டன .ஆனால் குழிகளில் கொட்டப்பட்ட குப்பைகள் அக்குழியில் அகற்றப்படாமல் நிரம்பிய நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் குப்பைகள் அனைத்தும் தண்ணீர் நிரம்பி வீதிகளிலும் வீட்டுக்குள்ளும் வருகின்றன. குப்பை குழிகளை சுற்றி விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது .
குழந்தைகள் மைதானத்தில் காலையிலும், மாலையிலும் விளையாடி வருகின்றனர். ஓரத்தில் இறங்கினாலோ அல்லது தவறி விழுந்தாலோ குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்து நேரிடக் கூடும் அந்த குப்பைகளை கிட்டத்தட்ட 6 அடி ஆழமும் 20 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. அக்குளில் நீர் நிரம்பி உள்ளதால் கொசுக்கள் அதிகமாக உருவாகி மைதானத்தில் விளையாடும் குழந்தைகளையும் அதை சுற்றி உள்ள வீடுகளிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் அங்கு மலேரியா, டெங்கு டைபாய்டு போன்ற காய்ச்சல் பரவி வருகின்றன. தற்போது சூழ்நிலையில் கொரோனா காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் காய்ச்சல் என்றாலே மிகவும் அச்சப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லும் நிலைமை ஏற்படுகிறது. இந்நிலையில் குப்பைகளில் நிரம்பியுள்ள தண்ணியால் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதை பற்றி பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் துணைத் தலைவரிடம் முறையிட அவரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.






