--- --:--:-- --

தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை..!

10

டெல்லியில் அரசின் தடையை மீறி பட்டாசு வெடித்தால் ஒன்றரை ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் எச்சரித்துள்ளார்.

 

டெல்லியில் வரும் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.

 

எவரேனும் விதிமுறையை மீறினால் மாசு கட்டுப்பாட்டு சட்டப்படி உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும் எனவே பட்டாசு தடை உத்தரவை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon