தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்..!
ஆர்மீனிய எல்லையில் பறந்த ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டரை அசர்பைஜான் படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நாகர்நோக் ஆரவ்பாக் தொகுதி தொடர்பாக ஆர்மீனியாவுக்கும், அசர் பைசானுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இதில் ரஷ்யா நடுநிலை வகித்த போதிலும், போர் ஆர்மீனியா பகுதியில் விரிவடைந்தால் அந்த நாட்டுக்கு ஆதரவளிப்போம் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேச்சி வான் பகுதியில் பறந்த ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான எம்ஐ 24ரக ஹெலிகாப்டரை அசர்பைஜான் படையினர் நேற்று மாலை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.






