மதுரையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது..!
மதுரை சோழவந்தானில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் அவர்களில் 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முள்ளி பள்ளத்தை சேர்ந்த பாண்டித்துரை என்ற இளைஞர் மூன்று மாதங்களுக்கு முன் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்.டிக் கொல்லப்பட்டார். கொலை வழக்கில் அதிரடியாக 8 பேரை சோழவந்தான் காவல் துறையினர் கைது செய்தனர் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் தொடர் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.






