சபரிமலை கோவிலுக்கு ஆன்லைன் முன்பதிவு ஒரே நாளில் நிறைவு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே முடிவடைந்தது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பேருக்கும் மற்ற நாட்களில் நாளொன்றுக்கு ஆயிரம் பேரும் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். முன்பதிவு sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்கான முன்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பு கொரொனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வந்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






