மக்களுடன் தான் கூட்டணி வைக்கப் போவதாக கமல் அறிவிப்பு..!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தற்போது மக்கள் நீதி மையம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அதில் முக்கிய அம்சமாக வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி என்பது என் வேலை கூட்டணியை நான் கவனித்துக் கொள்கிறேன் ஆனால் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் கமலஹாசன் கூறியுள்ளார்.
அதேபோல நான் மக்களுடன் மட்டுமே தான் தற்போது கூட்டணி வைத்து களத்தை காண போகிறோம் என்றும் அவர் பேசியதாக அந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியோடு தேர்தலைக் காண்வர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மக்களுடன் மட்டுமே தான் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கமல் பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






