--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 2511 பேருக்கு பாதிப்பு..!3940 பேர் டிஸ்சார்ஜ்!!

12.1

மிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து ஒரே நாளில் 2481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3940 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து 10-வது நாளாக தினசரி தொற்று பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கீழாக பதிவாகி வருகிறது. உயிரிழப்பும் குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது.

 

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் இன்று பாதிப்பு மேலும் குறைந்து 2481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7.29 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 1183 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 3940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 504 பேர் மட்டுமே ஆகும்.

 

சென்னையிலும் தொடர்ந்து 15-வது நாளாக தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழாக படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் இதுவரையிலும் மொத்த தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து 2.01 லட்சமாக உயர்ந்துள்ளது.

 

சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3669 ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அதிக பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று கோவையில் 243 , செங்கல்பட்டு 136, சேலம் 125, திருவள்ளுர் 115 என இந்த மாவட்டங்களில் நூறு எண்ணிக்கைக்கு மேல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் இன்று மட்டும் 70 ஆயிரத்து 297 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி 1.01 கோடியாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon