தப்பி ஓட முயற்சித்த கைதி..!சுற்றி வளைத்த சிறைக்காவலர்கள்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பி ஓட முயற்சித்த கைதியை சிறைக்காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல் என்பவர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இன்று காலை சிறைச்சாலையிலிருந்து மரத்தில் ஏறிய சக்திவேல் சுவரை தாண்டி குதித்து தப்பி செல்ல முயற்சித்தான். சக கைதிகள் கூச்சலிட்டதால் சுதாரித்த சிறை காவலர்கள் போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சக்திவேலை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




