--- --:--:-- --

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!

12

விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

 

இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது. சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி பூங்கா உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon