--- --:--:-- --

மலைப்பாதையில் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

5

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலைப்பாதையில் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர்கள் ஓசூர் அருகே கீழடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.

 

மலைப்பாதையில் வளைவு ஒன்றில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon