--- --:--:-- --

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு..!

8

துரையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கீழகுயில்குடி சீனிவாச காலனியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது காருக்கு அதிகாலை 3:20 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தீ வைத்துவிட்டு ஓடியுள்ளார்.

 

எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி காருக்கு தீ வைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அலெக்ஸ்க்கு சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கும் தீவைப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon