தமிழகத்தில் இன்று 5015 பேருக்கு கொரோனா… 5005 பேர் டிஸ்சாஜ்.. பாதிப்பில் சென்னை தொடர்ந்து உச்சம்
தமிழகத்தில் இன்று 5015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 5005 பேர் டிஸ்சாஜ் செய்யப் ட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 5015 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது இதனா மொத்த கொர்ரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 ஆகும்.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆ யிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,095 பேர் ஆவர்.
இன்றும் சென்னையில் தொடர்ந்து 18-வது நாளாக ஆயிரத்தை தாண்டி 1250 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . கோவையில் 389, சேலம் 294, தஞ்சை 181 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.






