அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறவில்லை..!
சென்னையில் மாநகராட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.
சென்னையில் தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக தனியார் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சரின் பெயர் இடம் பெற்றிருந்தது.
ஆனால் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.






