--- --:--:-- --

குழந்தைகள் பயன்படுத்தும் டயாபரில் நச்சு ரசாயனம்..!

4

குழந்தைகள் பயன்படுத்தும் டயாபரில் நச்சு ரசாயனம் கலந்து இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த டாக்சிஸ் லிங்க் என்ற நிறுவனம் டயப்பர் மாதிரிகளில் நடத்திய ஆய்வில் நச்சு இரசாயனம் குழந்தைகளின் டயாப்பரில் 2.36 பிபிஎம் முதல் 302 பிபிஎம் வரை இருப்பது தெரிய வந்துள்ளது.

 

அந்த ரசாயனம் குழந்தைகளின் உடலுக்குள் சென்று நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் செய்ய பயன்படும் ரசாயனத்தை பயன்படுத்த தென்கொரியா , ஜப்பான் போன்ற பல நாடுகள்தடை விதித்துள்ளன.

 

ஆனால் இந்தியாவில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்று டாக்ஷிஸ் லிங்க் என்ற ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon